Sunday 11 October 2015

வரதட்சணை..... 

நானும் நீயும் ஒன்று! 
விற்பனைக்கு நிறுத்தப்பட்ட 
அழகு பொம்மையாய் இங்கே!
என் அனுமதியின்றி
என்னை வாங்கிச் செல்ல வருபவர் பலபேர். .!
என்னை ஆட்டிப்படைக்கும் சாவி அவர்கள் கைகளில். ..!
வாய்பேசா பொம்மை நீ..!
வாய் இருந்தும் பேச முடியா பொம்மை நான். ..!
நம் இருவருக்கும் இடையே என்ன வேறுபாடு? 
பணம் வாங்கி விற்கப்படும் பொம்மை நீ
பணம் கொடுத்து விலைபோகும் பெண்மை நான்...!


 -----ஹரிதா

Wednesday 30 September 2015

தை தேடி ந்த ம்......!





"விழித்தெழு மனமே விழித்தெழு"

ஓட்டங்கள் கொண்ட வாழ்வில்..!
ஏக்கத்தோடு ஒரு தேடல் பார்வை.!
மழலையின் அழகில் 
உலகை மறந்த காலம்மாறி 
தன் நிலையை மறந்த  
காமப்பசியில் பிஞ்சும் பழுத்தது...!
களங்கமற்ற கல்வியை
நன்கொடை என்னும் பெயரில்  
நம் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சியாய் 
வியாபார வரிசையில் கல்விக்கூடங்கள்...
தாய்மொழி தமிழாம் தேனினும் இனிது 
பாடிய பாரதியோடு மாண்டுபோனது  
ஆங்கில மோகத்தில் தமிழும் இன்று. ..!

"விழித்தெழு மனமே விழித்தெழு"
 
அன்னையின் அன்பு கலந்த கைவிரல் சூட்டில் 
பிணைந்து ஊட்டும் அன்னம் மாறி 
கரண்டிகளால் குறைந்து போனது அன்பின் ருசி. ..!
கழுத்து முதல் கால்வரை  
முழுத்தேகம் மறைத்த புடவை மாறி 
முழங்கால் மூடாத ஒருவர் அணியும் ஆடையைக்கிழித்து  
இருவர் அணியும் நிலையில்  
மாறிப்போனது இன்றைய நாகரிகம்...!
உறங்கிக்கிடந்தது போதும் இனியாவது 
"விழித்தெழு மனமே விழித்தெழு"

                      ----
ஹரிதா





தை தேடி ந்த ம்......!

எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள  கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்.
 

                                                                 
                                                                     இப்படிக்கு,
                                                                     
                                                                      ஹரிதா